பிளஸ் - டூ தேர்வு குறித்து முடிவு.. தமிழக அரசு ஆலோசனை

0 3913

மிழகத்தில் பிளஸ்டூ தேர்வு நடத்தப்படுமா? என்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி முடிவு எடுப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

CBSE - பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பிளஸ் - டூ தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சூழலில், தமிழக மாணவர்களின் எதிர்காலம் கருதி, எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், கல்வியாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு குறித்து, முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் விளக்கம் அளித்தார். நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சட்டப்பேரவை கூட்டத் தொடர் கூடும் போது, இதற்கு பதில் தெரிய வரும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பிளஸ் -டூ பொதுத்தேர்வு குறித்து சட்டப்பேரவை கட்சி தலைவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்பட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள். இதுதவிர, மருத்துவர்கள் மற்றும் மனநல நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments