சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

0 2734

70 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 10 கிலோ ஹெராயினை கடத்திவந்த தென்னாப்பிரிக்க பெண்கள் 2 பேர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

சர்வதேச போதை கடத்தும் கும்பல் சென்னைக்கு போதைப்பொருட்களை கடத்திவருவதாக வந்த தகவலை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கத்தாரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் நல்ல உடல்நலத்துடன் கூடிய பெண் ஒருவரை நாற்காலியில் அமர வைத்து மற்றொரு பெண் தள்ளிக்கொண்டுவந்தார்.

சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் சோதனை நடத்திய அதிகாரிகள், சூட்கேசில் ரகசிய அறைகள் மூலம் போதை பொருள் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இருவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments