சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ நெருங்குகிறது

0 4771

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்குகிறது.  வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 23 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 90 ரூபாய் 38 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹராஷ்டிரம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை தாண்டியது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 105 ரூபாய்க்கு விற்பனையாகின்றது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 36காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு  4 ரூபாய்93 காசுகளும் உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments