கோவின் இணையதளத்தில் தமிழையும் சேர்க்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

0 2973

கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் தமிழ் மொழி சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் முதலில் ஆங்கிலமும், இந்தியும் மட்டும் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 9மாநிலங்களின் மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில், தமிழ் மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், தமிழ் மொழியை உடனடியாக சேர்க்க வேண்டும் என முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக சுகாதாரத்துறை மத்திய அரசிடம் வலியுறுத்தியது.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு கோவின் இணையதளம் படிப்படியாக பல்வேறு மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அடுத்தகட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தமிழ்மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments