அன்று மில்க் அபிராமி இன்று விஷமி வரலெட்சுமி... திருட்டு காதலுக்கு குழந்தை கொலை.!

0 9772

சென்னையில் பெற்ற குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக கைதான அமிராமி போல , காதல் வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக கருதி 3 வயது அழகிய பெண் குழந்தையை கொலை செய்து இடுகாட்டில் புதைத்த பெண்ணை ரகசியகாதலனுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கொலைகார பெண்ணை அடித்து விரட்ட திரண்ட மக்களின் ஆவேசப் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னையில் பிரியாணி காதலனுக்காக , தான் பெற்ற இரு குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமியை அவ்வளவு எளிதில் மறந்திருக்க இயலாது, அதே போன்ற தொரு கொடூர சம்பவம் விசாகப்பட்டினம் அருகே அரங்கேறி இருக்கின்றது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாடா மாரிகவலசாவை சேர்ந்த வரலட்சுமிக்கும் - ரமேஷ் தம்பதிக்கு மூன்று வயதில் சிந்து ஸ்ரீ எனும் குழந்தை உள்ள நிலையில் ரமேஷ் பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார்.

வரலட்சுமி வேலைக்கு சென்ற தொழிற்சாலையில் அறிமுகமான ஜெகதீஷ் என்பவருடன் ஏற்பட்ட ரகசிய காதலால் தவறான தொடர்பு ஏற்பட்டது. ஊர் திரும்பிய கணவர் ரமேஷ் மனைவில் செல்போனில் காற்றுபுகக்கூட இடமில்லாமல் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கேட்டு மனைவி வரலட்சுமியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவரை பிரிந்து சென்ற வரலெட்சுமி, குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

கடந்த நான்கு மாதங்களாக வரலெட்சுமி , ஜெகதீஷ்டன் குடித்தனம் நடத்தி வந்த நிலையில் குழந்தையை பார்க்கும் ஆவலில் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார் ரமேஷ், இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக கூறிய வரலெட்சுமி, குழந்தையின் சடலத்தை மதுரவாடாவில் உள்ள மயானத்தில் புதைத்து விட்டதாக கணவர் ரமேஷ்க்கு தெரிவித்துள்ளார்.

இதனைகேட்டு அதிர்ந்து போன ரமேஷ் குமார் தனது குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், மனைவியே கள்ளகாதலுடன் சேர்ந்து திட்டமிட்டு குழந்தையை கொலை செய்திருப்பதாக மதுரவாட காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து சடலத்தை தோண்டி எடுத்தனர்.

பிணகூறாய்வுக்காக தனது குழந்தையின் சடலத்தை தூக்கிக் கொண்டு கனத்த இதயத்துடன் ரமேஷ்குமார், விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார்.

மேற்கொள்ளப்பட்ட பிணக்கூறாய்வில் வரலட்சுமி , காதலன் ஜெகதீசன் உடன் சேர்ந்து திட்டமிட்டு குழந்தையை கொலை செய்தது உறுதியானது.

இதையடுத்து ரகசிய காதல் கொலையாளிகளான வரலெட்சுமி மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் காதல் வாழ்க்கையை உல்லாசமாக வாழ்வதற்கு இடையூறாக இருந்ததால் தனது குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, உடல் நலம் சரியில்லாமல் குழந்தை உயிரிழந்ததாக நாடகமாடி புதைத்ததை வரலட்சுமி ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வரலட்சுமி மற்றும் ஜெகதீஷ் இருவரையும் சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

அப்பொழுது கொடூர கொலையாளிகள் இருவருக்கும் எதிராக ஆவேசமாக திரண்ட பொதுமக்கள் போலீசாரின் வாகனத்தை சுற்றிவளைத்து குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் நாங்கள் தண்டனை கொடுக்கிறோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது போலீசார் வாகனத்தை மறித்து கீழே படுத்து மறியல் செய்த அப்பகுதி மக்கள், போலீஸ் வாகனத்தையும் தாக்க தொடங்கினர்.

இதையடுத்து போலீசார் இருவரையும் வாகனத்தை விட்டு கீழே இறக்காமல் மீண்டும் காவல் நிலையத்திற்கே அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தைக்கு விஷம் கலந்த உணவு கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுவதால் போலீசார் அது தொடர்பான தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

வேலைக்கு சென்று குடும்பத்தை கவனிக்க நல்ல கணவனும், இருவரது அன்பின் அடையாளமாக அழகிய பெண் குழந்தையும் இருக்க , மரம் விட்டு மரம் தாவும் மந்திகள் போன்ற நிலையில்லா மனது கொண்ட திருட்டுத்தனமான காதலால் கொலைகாரி பட்டத்துடன், ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் அவல நிலை தள்ளப்பட்டுள்ளார் வரலெட்சுமி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments