பாலியல் வழக்கில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 3 நாள் போலீஸ் காவல்

0 2442

யிற்சிக்கு வரும் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை பாரிமுனையில் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் தடகள பயிற்சி மையம் நடத்தி வந்த நாகராஜன், தன்னிடம் பயிற்சிக்கு வரும் வீராங்கனகளுக்கு பிசியோதெரபி வழங்குவதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்ட வீராங்கனை ஒருவர் அளித்த புகாரில் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார் அவனை கைது செய்தனர்.

நாகராஜனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை மனுதாக்கல் செய்தது. இதனை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக், 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பூக்கடை அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுமதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments