தமிழகத்தில் தொடங்கியது தென் மேற்கு பருவமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 4769

மிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள், மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கையில் கன முதல் மிக கன மழையும், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். 

கேரளாவில் தொடங்கிய தென் மேற்கு பருவமழை, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ளது எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments