தற்காப்பு பயிற்சி அளிப்பதாக இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக ஜுடோ மாஸ்டர் கைதான வழக்கு, சிபிசிஐடி-க்கு மாற்றம்

0 3041
தற்காப்பு பயிற்சி அளிப்பதாக இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக ஜுடோ மாஸ்டர் கைதான வழக்கு, சிபிசிஐடி-க்கு மாற்றம்

சென்னை அண்ணா நகரில் தற்காப்பு கலை பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தாக ஜுடோ மாஸ்டர் கைதான வழக்கு, சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

அண்ணா நகரைச் சேர்ந்த ஜூடோ மாஸ்டரான கெபிராஜ், தன்னிடம் பயிற்சிக்கு வந்த கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அப்பெண் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

முதற்கட்ட விசாரணையில் பயிற்சிக்கு வரும் இளம் பெண்களுக்கு பாலியல் சீண்டலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படியென பயிற்சி அளிப்பதாக கூறிவிட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், போட்டிக்காக வெளி மாநிலங்களுக்கு பெண்களை அழைத்துச் செல்லும் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. கெபிராஜை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments