பத்மசேஷாத்ரி பள்ளி தாளாளர், முதல்வரிடம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை

0 3554
பத்மசேஷாத்ரி பள்ளி தாளாளர், முதல்வரிடம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், பத்ம ஷேசாத்ரி பள்ளி முதல்வர், தாளாளரிடம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 3 மணி நேரம் விசாரணை நடத்தியது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கீழ்ப்பாக்கத்திலுள்ள அந்த ஆணையத்தின் அலுவலகத்தில் ஆஜரான பி.எஸ்.பி.பி. பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஷீலா ராஜேந்திரனிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்ந்து, பி.எஸ்.பி.பி. பள்ளி மீதான குற்றச்சாட்டு குறித்து, சென்னை மாவட்ட கல்வி அதிகாரி அனிதாவிடமும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments