தமிழகம் முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் பேரார்வம்..!

0 2877

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. மக்களும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். 

கோவை மாவட்டத்தில் 88 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 பள்ளிகளில் சிறப்பு தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதிகாலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். கோவை மாவட்டத்தில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 800 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் 70-கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சில மையங்களில் தடுப்பூசி போட வந்த மக்கள் கூட்டம் கூட்டமாக காத்திருப்பதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடபட்டுள்ளது.

கடலூரில் மாவட்டத்தில் 13 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு தலைமை மருத்துவமனையில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.தேவையான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமிற்கு ஏராளமானவர்கள் வந்திருந்ததால் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காத சூழல் ஏற்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு 4 மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

மதுரை பைபாஸ் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் செயல்பட்டு வரும் முகாமில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தடுப்பூசி போட்டுக் கொள்ள கூட்டம் அதிகம் சேர்ந்த நிலையில், போலீசார் அவர்களை தனிநபர் இடைவெளியுடன் ஒழுங்குபடுத்தினர்.

 

விழுப்புரம் மாவட்டத்தில், இதுவரை ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 188 பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.போதுமான அளவு கையிருப்பு இல்லாததால் பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டன. 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த 5ஆயிரத்து120 டோஸ்களை வைத்து சமாளித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 1,35,249 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 9 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்ததை அடுத்து அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இரு நாட்களுக்கு முன் குமரி மாவட்டத்திற்கு 16ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்த நிலையில், அதில் 14ஆயிரம் டோஸ்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த ஒதுக்கபட்டன. இதனால், 18வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments