கடலூரில் சாராயம் குடித்த 3 பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதி; போலீசார் தீவிர விசாரணை

0 6831

டலூரில் சாராயம் குடித்ததாக பள்ளி மாணவர்கள் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 3 பேர், கிரிக்கெட் விளையாடிவிட்டு கரும்பு தோட்டம் வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, கரும்பு தோட்டத்தில் சாராய ஊறல் போடப்பட்டிருந்ததை கண்டு 3 பேரும் சாராயம் குடித்ததாக கூறப்படுகிறது.

சாரயத்தை குடித்து விட்டு வீட்டுக்குச் சென்ற 3 பேரும் மயங்கி விழுந்த நிலையில், பெற்றோர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மாணவர்களின் உடல்நிலை மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்கு ஜிப்மர் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments