கன்னடம் அழகற்ற மொழியா? -கூகுள் நிறுவனத்திற்கு குமாரசாமி கண்டனம்

0 2985
கன்னடம் அழகற்ற மொழியா? -கூகுள் நிறுவனத்திற்கு குமாரசாமி கண்டனம்

ன்னடம் அழகற்ற மொழி என்று கூறிய கூகுள் நிறுவனத்திற்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூகுள் தேடலில் இந்தியாவில் அழகற்ற மொழி எது என்று கேட்டால், அது கன்னடம் என்று சொல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கன்னடம் மட்டுமின்றி எந்த மொழியும் அழகற்ற, மோசமான மொழி இல்லை என்று கூறிய அவர், எல்லா மொழிகளும் அழகானது மட்டுமின்றி உணர்வுகளுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டுள்ளார்.

மொழியை அவமதிப்பது பெரும் வருத்தத்திற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையில் கன்னடர்களின் கடும் கண்டனத்தை அடுத்து அந்த பக்கத்தை கூகுள் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments