உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வி

0 4823
உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வி

லக கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் இந்திய அணி, கத்தாரிடம் தோல்வியை தழுவியது. 2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2023ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றில் இந்தியா விளையாடி வருகிறது.

தொடரின் இ-பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி மீதமுள்ள கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளுடன் மோதி வருகிறது. ஏற்கனவே உலக கோப்பையில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்து விட்ட இந்திய அணி தனது 5-வது லீக் ஆட்டத்தில் ஆசிய சாம்பியனான கத்தாரை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் முதல் பாதியின் 33-வது நிமிடத்தில் கத்தார் வீரர் அப்துலாசிஸ் ஹதெம் கோல் அடித்தார். பதில் கோல் திருப்ப ஆட்டத்தின் கடைசி வரை இந்திய அணி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணடைந்தன. இறுதியில் கத்தார் அணி 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments