”தமிழ்நாட்டுக்கு இலவசமாக 1 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன” -மத்திய அரசு

0 5524
”தமிழ்நாட்டுக்கு இலவசமாக 1 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன” -மத்திய அரசு

ஜூன் 2ம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு ஒரு கோடி தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 93 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு ஊசி போடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசித் தட்டுப்பாடு நிலவுவதாக சில ஊடகங்களில் தவறான தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு ஜூன் முதல் தேதியில் இருந்து 15ம் தேதி வரை ஏழரை லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் ஜூன் 15 முதல் 30 ம் தேதி வரை 18 லட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments