சின்ன வீட்டில்.. மனைவி வீட்டாரிடம் மாட்டிக் கொண்ட மாணவரணி...! அடிக்கு அடி உதைக்கு உதை

0 162451

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வரதட்சனை கேட்டு மனைவியை அடித்து விரட்டிய ஷூ கம்பெணி அதிபர் ஒருவரை, அவரது காதலியின் வீட்டில் வைத்து கையும் களவுமாக பிடித்த, அவரது மனைவி புத்தியில் உறைக்கும்படி அறைவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியாத்தம் பிச்சனூர் பேட்டை ஆர் எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் மாணவரணி சுந்தர், பைனான்ஸ் மற்றும் ஷூ தொழிற்சாலை நடத்திவரும் சுந்தர் நெல்லூர்பேட்டை பச்சையப்பன் நகர் பகுதியை சேர்ந்த வித்யா என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளிட்ட 3 மகன்கள் உள்ள நிலையில் சுந்தர், மனைவியின் 35 சவரன் நகைகளை வாங்கிக் கொண்டதோடு தொழிலை மேம்படுத்த பணம் தேவைப்படுவதால், வரதட்சனையாக பணம் வாங்கி வரும்படி மனைவி வித்யாவிடம் அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகின்றது. மேலும் வயசு வித்தயாசமின்றி பல பெண்களை காதல்வலையில் வீழ்த்தி சுந்தர் ஊர் சுற்றிவந்ததாகவும் கூறப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்பு மனைவியை அடித்து தாய்வீட்டுக்கு அனுப்பி விட்டு 45 வயதான காதலியின் வீட்டின் படுக்கையில் காபி அருந்திக் கொண்டிருந்த சுந்தரை கையும் களவுமாக பிடித்த மனைவி , அவருக்கு கன்னம் வீங்கும் அளவுக்கு பளார் அறைகொடுத்தார்

இருட்டு அறைக்குள் திருட்டு பூனையாய் சிக்கித்தவித்த மாணவரணி மன்மதன் சுந்தரை வெளியே இழுத்து வந்த நிலையில் மனைவி வீட்டார் முன்பு பம்மிக் கொண்டு நின்ற சுந்தரை வீடியோவாக படம் பிடித்து வைத்திருந்தனர்.

அதன் பின்னர் நல்லபடியாக குடும்பம் நடத்துவதாக கூறிய சுந்தர் மீண்டும் தடம்மாறியதால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை உருவாகியுள்ளது. இந்த வீடியோ விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவேன் என்று சுந்தர் கொலை மிரட்டல் விடுப்பதாக, குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பவித்யா புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த போலீசார் , சுந்தர், திமுகவில் மாணவரணி மாவட்ட துணை அமைப்பளராக இருப்பது தெரிந்தும், அவரது மனைவிக்கு எதிராக செய்த கொடுமைகளை உறுதி செய்து அவர் மீது வரதட்சனை கொடுமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலித்து 3 மகன்களை பெற்ற நிலையில் தன் கணவர் திருந்தி தன்னிடம் வந்தால் சேர்ந்துவாழ தயாராக இருப்பதாக கூறும் வித்யா, அவர் வரவில்லை என்று கண்ணீருடன் காத்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments