கர்நாடகாவில் ஜூன் 14வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

0 4274
மருத்துவ நிபுணர்கள் அளித்த பரிந்துரையின் படி கர்நாடக மாநிலத்தில் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர்கள் அளித்த பரிந்துரையின் படி கர்நாடக மாநிலத்தில் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடு இதுவரை முழுமையாக கட்டுக்குள் வரவில்லை என்பதாலும், கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என பெங்களூருவில் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு வரும் 7 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில்,  தமது அமைச்சரவை சகாக்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 14 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அவர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments