கொரோனா தடுப்பு மருந்தின் பக்கவிளைவுக்கு இழப்பீடு வழங்குவதில் இருந்து பாதுகாப்புக் கோரி மத்திய அரசிடம் சீரம் நிறுவனம் கோரிக்கை

0 2844
கொரோனா தடுப்பு மருந்தின் பக்கவிளைவுக்கு இழப்பீடு வழங்குவதில் இருந்து பாதுகாப்புக் கோரி மத்திய அரசிடம் சீரம் நிறுவனம் கோரிக்கை

கொரோனா தடுப்பு மருந்தின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்படி மத்திய அரசிடம் சீரம் நிறுவனமும் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பைசர், மாடர்னா நிறுவனங்கள் தங்களின் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கவும், இழப்பீடு வழங்குவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கவும் கோரியுள்ளன.

இதையடுத்துப் புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனமும் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவதில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரியுள்ளது. இந்திய நிறுவனம், வெளிநாட்டு நிறுவனம் எனப் பாராமல் அனைத்துக்கும் ஒரேபோலப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments