மாநில பிளஸ் 2 தேர்வு ரத்து -உத்தர பிரதேச அரசு அறிவிப்பு

0 2517

த்தர பிரதேசத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 - 21 கல்வியாண்டிற்கான CBSE பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி செவ்வாயன்று அறிவித்த நிலையில், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் தங்கள் மாநில பாடத்திட்டத்திற்கான பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தன.

இந்த வரிசையில் உத்தரபிரதேச அரசும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்துள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் வழங்க மாற்று வழிகள் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments