விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்க அனுமதி..!

0 5491
விஜய் மல்லையாவின் சுமார் 5ஆயிரம் கோடி கடன் பாக்கிக்காக, அவரது சில சொத்துக்கள் மற்றும் பங்குகளை எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் விற்றுக் கொள்ளலாம் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் மல்லையாவின் சுமார் 5ஆயிரம் கோடி கடன் பாக்கிக்காக, அவரது சில சொத்துக்கள் மற்றும் பங்குகளை எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் விற்றுக் கொள்ளலாம் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சொத்துக்கள் அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டிருந்தால் அவற்றை மீட்டு, விற்றுக் கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

பெங்களூருவின் முக்கிய வர்த்தக பகுதியில் உள்ள UB City கட்டிடத்தின் பல தளங்கள், United Spirits மற்றும் United Breweries ஆகிய மது நிறுவனங்களில் மல்லையாவுக்கு உள்ள பங்குகள் ஆகியவற்றை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் நிகர மதிப்பு 5 ஆயிரத்து 646 கோடியே 54 லட்சம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரம் மல்லையா மீதான குற்றங்கள் நிரூபிக்கபடவில்லை என்றால் இந்த சொத்துக்களை திருப்பிக் கொடுப்பதாக வங்கிகள் உத்தரவாத கடிதம் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments