"TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் ஆயுட்காலம் வரை செல்லும்" -மத்திய அரசு அறிவிப்பு

0 3577

டெட் (TET) எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் ஆயுட்காலம் வரை செல்லும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற விதிமுறை அமலில் இருந்தது. இந்நிலையில் சான்றிதழை ஆயுட்காலம் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் மாற்றம் செய்ய அண்மையில் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் முடிவெடுத்தது.

இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 2011ஆம் ஆண்டு முதல் டெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் மற்றும் இனி தேர்ச்சி பெறுவோர் என அனைவருக்கும் சான்றிதழானது ஆயுட்காலம் வரை செல்லும்.

2012-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் டெட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அதில் தேர்ச்சி பெற்றுள்ள சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments