கொரோனா சூழலில் களப்பணியாற்றும் காவல்துறையினருக்கு ரூ.5000 ஊக்கத் தொகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

0 2277

கொரோனா சூழலில் களப்பணியாற்றிவரும் காவல்துறையினர் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 184 பேருக்கு ஐயாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் செய்திக் குறிப்பில், கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது காவல்துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

காவல்துறையினரின் பணியை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 184 பேருக்கு ஐயாயிர ரூபாய் வீதம் ஊக்கத் தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments