சப் - இன்ஸ்பெக்டரா.. உள்ளூர் சண்டியரா? சத்தம் ஓவரா இருக்குதே

0 5557

நெல்லை மாவட்டம் மானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவர் உள்ளூர் சண்டியர் போல  பொதுமக்களிடம் மிகவும் தரக்குறைவாக பேசும் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.

நெல்லை மாவட்டம் மானூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் செல்வகுமார் ஊரடங்கையொட்டி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மானூர் வடக்குத்தெரு பகுதியில் அவர் செல்லும்போது அங்கு நின்றிருந்த இளைஞர்கள், எஸ்ஐயை பார்த்ததும் ஓட்டம் பிடித்துள்ளனர். இதனை கண்ட எஸ்.ஐ அவர்களை நிற்குமாறு கூறி அவர்களை விரட்டிப்பிடிக்க முயன்றுள்ளார்.

இதைப் பார்த்த இளைஞரின் பெற்றோர், எஸ்ஐயை தடுத்து எதற்காக எங்கள் மகனை நிற்கச்சொல்கிறீர்கள் என எதிர்த்து கேள்வி கேட்டுள்ளனர்.

நான் ஒரு எஸ்ஐ, என்னை எப்படி தடுத்து கேள்வி கேட்பீர்கள் என்று மிகவும் கடுமையான ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தை அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறும் போது கண்ணியமிக்க காவல் துறையில் சாத்தான்குளம் ரவுடி போலீஸ் போல பெண்கள் மத்தியில் உள்ளூர் சண்டியர் போல ஆபாசமாக பேசி பகிரங்க மிரட்டல் விடுக்கும் செல்வக்குமார் மீது உயர் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிவரும் காவல்துறையினருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது எஸ்.ஐ. செல்வக்குமாரின் இந்த அருவெருக்கத்தக்க பேச்சு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments