கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம்.. தடையின்றி கிடைக்க ஏற்பாடு தேவை..!

0 2779
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தடுப்பூசி தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தடுப்பூசி தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் 50 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர், இதுவரை 1லட்சத்து14ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 16 ஆயிரம் டோஸ் கையிருப்பில் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தடுப்பூசி போட வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். மொத்தம் 32 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாமக்கல் நகர் பகுதியில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் 222 கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 20 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், மீண்டும் இன்று முதல் அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது ஏராளமானவர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்குப் பிறகு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 67ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இன்றும் வழக்கம்போல் அனைத்து முகாம்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி மாவட்டத்தில் 8,000 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் இலவுவிளையில் கொரோனா தடுப்பூசி போட வந்தவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள மையத்தில் தடுப்பூசி போடுவதற்காக சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அதில் ஆயிரம் பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுக்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த விளவங்கோடு எம்.எல்.ஏ., விஜயதரணி பொதுமக்களிடம் பேசி சமாதானப்படுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments