சிறை ஊழியர்களை முன்கள பணியாளர்களாக கருதி அவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட வேண்டும்: தமிழக அரசு

0 2829

சிறை பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாக கருதி அவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக  சிறைக் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது, பரோல் வழங்குவது,சிறைகளில் காலியாக உள்ள மருத்துவர், தூய்மைப் பணியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணை நடத்துகிறது.

அப்போது  சிறைகளில் 58.72 சதவீத கைதிகள் மட்டுமே உள்ளதாகவும், அவர்களில் 1295 பேருக்கு  முதல் டோசும், 38 பேருக்கு இரண்டாவது டோசும் போடப்பட்டுள்ளது என அரசு தெரிவித்த து.சிறை பணியாளர்கள் 700 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள்,தொற்று பாதிப்பு அதிகமானால், சிறை கைதிகளை பரோலில் விடுவிக்க, நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல் உடனடி நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments