தமிழக அரசின் 6 புதிய அறிவிப்புகள்..!

0 9393
கலைஞரின் பிறந்த நாளையொட்டிச் சென்னை கிண்டியில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என்பது உள்ளிட்ட ஆறு புதிய அறிவிப்புகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில், இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. இலக்கிய மாமணி என்ற விருது உருவாக்கப்பட்டுத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூவருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் உலர்களங்கள் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நகர்ப்புற அரசு பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments