செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது-உயர்நீதிமன்றம்

0 2732
செங்கல்பட்டு தடுப்பு மருந்து வளாகத்தில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு தடுப்பு மருந்து வளாகத்தில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி என்பவரின் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, செங்கல்பட்டு தடுப்பு மருந்து வளாகத்தைத் திறக்க வலியுறுத்தித் தமிழக முதலமைச்சர், பிரதமருக்குக் கடிதம் அனுப்பியுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டாமா? எனவும், மாநில அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்க அவகாசம் வழங்க வேண்டாமா? எனவும் மனுதாரரைப் பார்த்து நீதிபதிகள் வினவினர்.

இந்தத் தடுப்பு மருந்து வளாகத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மத்திய அரசு பரிசீலிக்கும் என நம்புவதாகக் கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க மறுத்து விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments