பரஸ்பர மோதலால் ரஷ்ய-ஜெர்மனி விமான சேவையில் ஏற்பட்ட தடங்கல்

0 2557

ரஷ்யாவும், ஜெர்மனியும் பதிலுக்கு பதில் எடுத்த நடவடிக்கையால் இரு நாடுகளுக்கும் இடையேயான விமான போக்குவரத்து  செவ்வாய்க்கிழமை  தடைபட்டது.

ரஷ்யாவுக்கு செல்லும் விமானங்கள்  பெலாரஸ் நாட்டின் வான்வெளியாக செல்லக்கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அண்மையில் பெலாரஸ் அரசு தனது எதிர்ப்பாளர் பயணம் செய்த விமானத்தை இடைமறித்து தமது நாட்டுக்கு கொண்டு சென்றதே இதற்கு காரணம். இதற்கு பதிலடியாக மாஸ்கோவுக்கான ஜெர்மனியின் லுப்தான்சா விமான சேவை உரிமத்தை  புதுப்பித்து வழங்க ரஷ்யா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் நேற்று பிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து தலா ஒரு லுப்தான்சா விமானமும், ரஷ்யாவின் ஏரோபிளோட் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிராங்பர்ட் விமான நிலைய இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments