மேலும் பல இந்திய தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்

0 2113
பயாலஜிகல்-இ நிறுவனத்தின் வரிசையில் மேலும் பல உள்நாட்டு தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

பயாலஜிகல்-இ நிறுவனத்தின் வரிசையில் மேலும் பல உள்நாட்டு தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம்  ZyCoV-D என்ற பெயரிலான தடுப்பூசியை, இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி டோசுகள் தயாரிக்கும் என கூறப்படுகிறது.

5 முதல் 12 வயதினருக்கான தடுப்பூசியையும் இந்த நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. புனேவில் உள்ள ஜென்னோவா பயோபார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசியும் இந்த ஆண்டு இறுதிக்குள் 6 கோடி டோசுகள் என்ற அளவுக்கு தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்தியாவின் முதலாவது mRNA தடுப்பூசியாகும். மூக்கின் வழியாக செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் நேசல் வேக்சினின்10 கோடி டோசுகளை வரும் டிசம்பருக்குள் வாங்க சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments