கொரோனா அலை: தப்பிக்க தடுப்பூசியே ஆயுதம்

0 3969

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையில் உயிரிழப்புகளை தவிர்க்க  தடுப்பூசிசெலுத்திக்கொள்வது மட்டுமே ஒரே தீர்வு என மருத்துவ துறையினர் உறுதிபடத் தெரிவிக்கின்றனர். 

முதல் இரண்டு அலைகளில் இரண்டரை லட்சம் பேரை பலிகொடுத்தும், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளில் தீவிரம் காட்டாமல் இருந்ததால், அமெரிக்காவில் 3ஆவது அலையில் மூன்றரை லட்சம் பேர் உயிரிழந்ததாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மூன்றாவது அலையிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்ட அமெரிக்கா, தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தியதால், தற்போது 4வது அலையில் பெரிதும் பாதிக்கப்படாமல் உள்ளதாக கூறும் மருத்துவர் ஃபரூக்அப்துல்லா, இந்தியாவில், 3ஆம் அலையில் அதிக உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு என தெரிவிக்கிறார். 

இந்தியாவில் ஜூன் மாதத்துடன் 2ஆவது அலை முடிவுக்கு வரும் என்றும் அதன் பின்னர் தளர்வுகள் அறிவித்தாலும், கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிப்பதுடன், தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்பாமல், அனைவரும் குறிப்பாக 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதன் மூலம், கொரோனா 3ஆவது அலையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதே மருத்துவர்கள் ஆணித்தரமாக கூறும் கருத்து.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments