யூடியூப் பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த தம்பதி கைது

0 1948

ஊரடங்கு காலத்தில் யூடியூப்பில் பார்த்து சமையல் கற்பது, கைவினை பொருட்கள் செய்வதை கற்பவர்களுக்கு மத்தியில், கள்ள நோட்டு அச்சடித்த தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டாவை சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

அனுமகொண்டா, வாரங்கல் உள்ளிட்ட பகுதியில் அதிக அளவில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

இதையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் சட்ட விரோதமாக கள்ள நோட்டு அச்சடிப்பில் ஈடுபட்ட வாங்கரி ரமேஷ், மற்றும் அவரது மனைவி சரஸ்வதி ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த கள்ள நோட்டு அச்சடிக்கும் ஸ்கேனர், பிரிண்டர் மற்றும் கட்டர் ஆகிய இயந்திரங்களையும் 10 லட்சத்து 9 ஆயிரத்து 960 ரூபாய் மதிப்புள்ள இரண்டாயிரம், ஐநூறு, நூறு உள்ளிட்ட கள்ள ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஊரடங்கால் இழந்த வாழ்வாதாரத்தை ஈடுசெய்ய யூடியூப் பார்த்து கள்ள நோட்டு அச்சடித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments