கலைஞரின் 98வது பிறந்ததினம்: நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

0 4091

கலைஞரின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

முத்தமிழறிஞர் கலைஞரின் 98-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பின்னர், கலைஞர் நினைவிடம் அருகே மு.க.ஸ்டாலின் மரக்கன்று நட்டு வைத்தார். தொடர்ந்து, கலைஞர் நினைவிடத்தில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் வழங்கினார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் சென்ற முதலமைச்சர், அங்கு கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கோபாலபுரத்தில் கலைஞரின் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், திருநங்கைகளுக்கு நிவாரண உதவி, பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஸ்மார்ட் போன்கள், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

சென்னை சிஜடி காலனியில் உள்ள எம்.பி. கனிமொழி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் உருவப்படத்திற்கும் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

 

முன்னதாக, கலைஞர் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோவில், தேர்தல் வெற்றியின் மூலம் தங்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன் என உருக்கத்துடன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments