இமாச்சலப் பிரதேசத்தில், மேகவெடிப்பு ஏற்பட்டு கொட்டித்தீர்த்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு

0 2068

இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு கொட்டித்தீர்த்த கன மழையால் முகலா வார்டு பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

ஏராளமான கால்நடைகளும் இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தன. வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மனிதர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அங்குள்ள சிவன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. போதுமான மழைநீர் வடிகால் ஏற்பாடுகள் செய்யவில்லை என்று நகராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

ஏராளமான வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து சுவர்களும் கூரைகளும் மழையால் சேதம் அடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments