16 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தியும், கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை தர மறுத்த தனியார் மருத்துவமனை

0 20489

கோவையில் கொரோனா சிகிச்சைக்காக 16 லட்ச ரூபாயைப் பிடுங்கிக் கொண்ட தனியார் மருத்துவமனை, நோயாளி உயிரிழந்த நிலையில், மேலும் 4 லட்சம் கேட்டு அடாவடி செய்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குனியமுத்தூரைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் கொரொனா தொற்று காரணமாக சுங்கம் பகுதியில் உள்ள மனு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நாளொன்றுக்கு ஒரு லட்சம் வீதம் கட்டணம் நிர்ணயித்த மருத்துவமனை நிர்வாகம், கடந்த 20 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்தது. இதுவரை 16 லட்ச ரூபாயை உறவினர்கள் செலுத்தியிருந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் அப்துல் காதர் உயிரிழந்தார்.

20 லட்ச ரூபாய்க்கு மீதியுள்ள 4 லட்ச ரூபாயையும் செலுத்தினால்தான் உடலைத் தருவோம் என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. தகவலறிந்து வந்த கொரொனா தடுப்பு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக், மருத்துவமனை நிர்வாகத்தை எச்சரித்து உடலை மீட்டு உறவினர்களிடம் கொடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments