கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டி - பரிசோதனைக்கு வரமறுத்த குடும்பத்தினர்: செய்வதறியாது தவித்த மாநகராட்சி அதிகாரிகள், போலீசார்

0 2621

சேலத்தில் கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டி ஒருவரின் குடும்பத்தினரை பரிசோதனைக்காக அழைத்த அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்த காட்சி வெளியாகி இருக்கிறது.

சேலம் 4 ரோடு அருகே உள்ள பெரமனூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவுக்கு ஒரு வயதான மூதாட்டி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆண், பெண் என 4 பேரை கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வருமாறு மாநகராட்சி அதிகாரிகள் அழைத்தனர். ஆனால் அவர்கள் பரிசோதனைக்கு வரமறுத்து வாக்குவாதம் செய்தனர். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள்ளுங்கள் என போலீசாரிடமே அவர்கள் சவால் விட்டனர்.

அதே பகுதியில் கொரோனா பரிசோதனைக்கு அஞ்சி சிலர் தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments