மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி

0 2316

மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கைக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்குத் தடுப்பூசி போடும் திட்டம் ஏன் வேகமாக நடைபெறவில்லை என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் தடுப்பூசி கொள்முதலுக்காக ஒதுக்கப்பட்ட 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதி எங்கே என்றும் மத்திய அரசின் விளக்கத்தைக் கேட்டுள்ளது.டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான திட்டவரைபடம் ஏதும் இருக்கிறதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அதிக விலைக்கு மாநிலங்களுக்கு தடுப்பூசி விற்பனை செய்வதை குறித்தும் கருத்து தெரிவித்த நீதிபதிகள் ஏன் மத்திய அரசு குறைந்த விலையில் வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாகத் தரக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments