5ஜி சேவையை எதிர்த்து நடிகை ஜூகி சாவ்லா தொடர்ந்த வழக்கு: டெல்லி ஐகோர்ட் கண்டனம்

0 3177

5ஜி சேவைக்கு எதிராக நடிகை ஜூகி சாவ்லா தொடர்ந்த வழக்கு, விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 நடிகை ஜூகி சாவ்லா தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி JR Midha முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விளம்பரத்திற்காக தொடரப்பட்டது என குறிப்பிட்ட நீதிபதி, முதலில் மனுதாரர் அரசிடம் இது தொடர்பாக அணுகி, அதில் உரிய பதில் கிடைக்காத நிலையில் தான் நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மனு குறித்து மனுதாரருக்கு தெரியாமல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதை தாம் பார்த்ததில்லை என கூறி வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments