பாலியல் புகாரில் சிவ சங்கர் பாபாவுக்கு அடுத்த ஆப்பு தயார்.! கடவுள் அவதாரம் என கைவரிசை

0 7849
பாலியல் புகாரில் சிவ சங்கர் பாபாவுக்கு அடுத்த ஆப்பு தயார்.! கடவுள் அவதாரம் என கைவரிசை

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி என்றபெயரில் உண்டு உறைவிடப்பள்ளிக்கூடம் நடத்திவரும் சிவசங்கர் பாபா என்பவர் தன்னை கடவுளின் அவதாரம் என்கூறிக்கொண்டு மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க, தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. 

தன்னை கடவுள் பெருமாளின் அவதாரம் எனக்கூறிக்கொண்டு இவ்வளவு நாள் கோபியர்கள் புடை சூழ ஆட்டம் போட்ட சிவ சங்கர் பாபாவுக்கு இது போதாத காலம்..!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ராமராஜ்ஜியம் என்ற பெயரில் ஒரு நகரை நிர்மானித்து, அந்த நகருக்கு நிலத்தை தானமாக கொடுத்த தனது பக்தரின் பெயரையும் தன்னுடைய அவதாரத்தின் பெயரையும் இணைத்து சுஷில்ஹரி இண்டர்னேஷனல் உண்டு உறைவிடப்பள்ளியை நிர்மானித்து நடத்திவருபவர் சிவசங்கர் என்கிற சிவசங்கர்பாபா..!

30 வருடத்துக்கும் மேலாக தன்னை கடவுளின் அவதாரம் எனக்கூறிக்கொண்டு பக்தையர்களை கோபியர்களாக நினைத்து தனது ஆசிரமத்தில் ஆனந்த நடனம் ஆடியபோதெல்லாம் சாமியாராக வணங்கப்பட்டவர்.. அவரது பள்ளியில் உள்ள 5 ஆம் வகுப்பு படிக்கின்ற சிறுமிகள் முதல் 12 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவிகள் வரை பலரிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக அங்கு படித்து வெளியேறிய இரு மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர்.

10 ஆம் வகுப்பு படித்த போது தன்னை தனியாக அழைத்த சிவசங்கர் பாபா அவரை லார்ட் கிருஷ்ணா என்றும் , முந்தைய பிறப்பில் நீ கோபிகா என்றும் கூறி கட்டாயப்படுத்தியதாகவும், தான் சம்மதிக்காமல் தப்பி வந்ததாக தெரிவித்துள்ள அவர், தான் 12 ஆம் வகுப்பு படித்த போது ஏராளமான மாணவிகளை மூளைச்சலவை செய்து தன்னை கடவுள் என நம்பவைத்து சிவசங்கர் பாபா கூட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை தான் பார்த்ததாக பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பலர் சாட்டையை சுழற்றிக்கொண்டிருக்க, தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர், பள்ளியில் புதன்கிழமை சோதனை நடத்தினர். திருப்போரூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வியும் ஆய்வின் போது உடன் இருந்தார். ஆசிரமத்தில் சிவசங்கர் பாபா இல்லை என்று கூறப்படுகின்றது.

பாலியல் புகாருக்கான முகாந்திரம் இருப்பதாக கருதிய ஆணைய அதிகாரிகள், வருகிற 11 ந்தேதி புகார் குறித்து விரிவான விசாரணைக்கு சிவ சங்கர் பாபா ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளனர். சிவசங்கர் பாபா தனக்கு எதிராக எந்த ஒரு சிறுமியும் புகார் தெரிவித்து விடக்கூடாது என்பதற்காக நித்யானந்தா போல அங்கு படிக்கின்ற சிறுமிகளை கோபியர்கள் கடவுளின் அவதாரம் என நம்ப வைத்து இது போன்ற விபரீத சேட்டைகளை செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

வெளி நாடு சென்றால் கூட தனக்கு பிடித்த சிறுமி ஒருவரை உடன் அழைத்து செல்வதை சிவசங்கர் வாடிக்கையாக வைத்திருந்ததையும் அது தொடர்பான வீடியோ ஆதரத்தையும் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் அங்கேயே தங்கி படித்து வரும் அனைத்து சிறுமிகளிடமும், தனித்தனியாக விசாரிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

24 வருடங்களுக்கு முன்பு டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த யாகவா முனிவர், பிராடு என கூறி சிவ சங்கர் பாபாவை அடித்ததால், அப்போது பிரபலாமாக பேசப்பட்டவர் சிவசங்கர்பாபா. ஆரம்பத்தில் நடனம் ஆடியே பக்தர்களுக்கு ஆசி வழங்கிய சிவசங்கர் பாபா கோடிகள் சேர்த்த பின்னர் ஆசிரமத்தில் இருந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ஆனந்தமாக ஆசி வழங்கி வந்தார். தற்போது தன்மீதான பழைய பாலியல் புகார்களால் ஆட்டம் கண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments