Zomato பாய்க்கு செம்ம மாத்து ரோட்டில் குஸ்தி... நமக்கு பொறுமை தானே முக்கியம்..!

0 4866

ரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ராவுத்தர் பிரியாணிக்கடையில் ஆர்டர் கொடுத்த பிரியாணி தாமதமானதால் உரிமைக்குரல் எழுப்பிய சொமோட்டோ ஊழியரை அடித்து உதைத்தகாட்சிகள் வைரலான நிலையில் தாங்கள் இருவரும் சும்மா அடித்துக் கொண்டதாக வினோத விளக்கம் அளித்துள்ளனர்

ஈரோடு கருங்கல்பாளையம் அருகேயுள்ள ராவுத்தர் பிரியாணிக் கடைக்கு ஆன்லைனில் ஆர்டர் எடுத்து வீடுகளுக்கு உணவு வகைகளை விநியோகிக்கும் சொமோட்டோ நிறுவன ஊழியர் சென்றுள்ளார்.

தான் கொடுத்த ஆர்டர் தாமதமானதால் பிரியாணிக் கடை உரிமையாளரிடம் கேட்ட போது இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இதனை எதிர்முனையில் இருந்து வீடியோ எடுத்த சிலர் சொமோட்டோ ஊழியருக்கு செம்ம மாத்து என்று வாட்ஸ் அப்களில் வைரலாக்கியுள்ளனர்

வீடியோவை பார்த்த கருங்கல்பாளையம் காவல்துறையினர் தகராறுக்கு காரணமான கடைக்குச் சென்று கடையின் உரிமையாளரிடமும், தனியார் நிறுவன ஊழியரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சம்பந்தப்பட்ட இருவரிடமும் தனித்தனியாகவும், கூட்டாகவும் காவல்துறையினர்விசாரணை மேற்கொண்ட நிலையில், தாங்கள் இருவரும் சமாதானமாகிக் கொண்டதாகவும் வழக்கு எதுவும் பதிய வேண்டாமென்றும் அவர்கள் காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டதால் காவல்துறையினர் அங்கிருந்து சென்றனர்.

இதனிடையே சொமோட்டோ ஊழியர் கூறுகையில் தான் எடுத்த ஆர்டர் நேரத்திற்குள் வராமல் தாமதமாக வந்ததால் தனக்கும் கடை முதலாளிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னையானதாகவும், அதன்பிறகு இருவரும் தவறை உணர்ந்து கொண்டு அதற்குப் பிறகு தொடர்ந்து ஆர்டர் எடுத்து பிரியாணியை வீடுகளுக்கு வழங்கி வருவதாக தெரிவித்தார்.

கடை உரிமையாளர் கூறுகையில், இருவரும் ஒருவித நெருக்கடி காரணமாக மோதிக் கொண்டதாகவும், இதை யாரோ தொழிற்போட்டியின் காரணமாகவோ செல்போன் கேமராவில் பதிவு செய்து சமூகவளைத்தளங்களில் வைரலாக்கியுள்ளதாக தெரிவித்தார்

பொதுவாகவே உணவுக்கடைகளில் ஆர்டர் தாமதமானால் தகராறு ஏற்படுவது சகஜமான ஒன்று அதற்காக கையில் கட்டை எடுத்து அடித்துக் கொண்டு, சாலையில் கண்டிப்புரண்ட நிலையில் , தங்கள் தவறை உணர்ந்து, ஒருவருக்கொருவர் சமாதானம் அடைந்து, மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து பிரச்சனை ஓய்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments