சென்னையில் எஸ்ஐ ஒருவர் மீது ரவுடி சி.டி மணி துப்பாக்கிச் சூடு

0 3798

சென்னை அருகே பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை பிரபல ரவுடி C.D. மணி துப்பாக்கி யால் சுட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

8 கொலைகள் உள்பட 30 வழக்கு களில் தொடர்புடைய தேனாம் பேட்டை C.D. மணி, கேளம்பாக்கம் சொகுசு விடுதியில் தங்கி இருந்த தகவல் அறிந்து, தனிப்படைபோலீசார், சுற்றி வளைத்தனர்.

அப்போது நிகழ்ந்த மோதலில், காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு, தப்ப முயன்ற C.D. மணியை போலீசார், துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். குண்டு காயம் அடைந்த உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தப்பி ஓட முயன்ற போது கால் முறிவு ஏற்பட்ட ரவுடி C.D. மணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதற்கிடையே, ரவுடிC.D. மணி பயன்படுத்திய B M W சொகுசு காரையும், துப்பாக்கியையும் சென்னை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments