தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 25,317 பேருக்கு கொரோனா தொற்று

0 4693

மிழகத்தில் முழு ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதால் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  25 ஆயிரத்து 317 பேருக்கு, புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனது. 

கொரோனாவின் பிடியில் இருந்து ஒரே நாளில் 32 ஆயிரத்து 263 பேர் மீண்டு, வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சை பலனின்றி,  483 பேர் உயிரிழந்தனர்.

கோவையில் 3 ஆயிரத்து 61 பேரும், சென்னையில் 2 ஆயிரத்து 217 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 

ஈரோட்டில் ஆயிரத்து 488 பேருக்கும், திருப்பூரில் ஆயிரத்து 252 பேருக்கும் புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 88 ஆயிரத்து 702 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments