திருப்பூர் : ஊரடங்கை மீறிய பனியன் நிறுவனத்தால், பெண் ஊழியர்கள் 47 பேருக்கு கொரோனா தொற்று

0 7012

திருப்பூரில் ஊரடங்கு விதிகளை மீறி இயங்கிய பனியன் நிறுவனத்தில் 47 பெண் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அதிகாரிகள் அந்நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர்.

திருப்பூர் அணைப்புதூரில், ஏஜிகே மார்கெட்டிங் என்கிற பனியன் நிறுவனம் விடுதி மற்றும் விருந்தினர் மாளிகையில் 140க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தங்க வைத்து ஊரடங்கு விதிகளுக்கு எதிராக இயங்கி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

மேலும் சுகாதாரத்துறையினர் வரவழைத்து ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் 47 பெண் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், அந்நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments