கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 14 மளிகை பொருட்கள் , 2 ஆம் தவணை நிவாரண உதவி, திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்

0 4126

லைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய், 14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்.

அறநிலையத்துறையின் கீழ் பணிபுரியும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக 4 ஆயிரம் ரூபாய், 10 கிலோ அரிசி மற்றும் 14 வகை மளிகைப்பொருட்கள் வழங்கும் திட்டம், கொரோனா நோய்த்தொற்றால் இறந்த பத்திரிக்கையாளர் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம், மருத்துவர், மருத்துவ பணியாளர், காவலர் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் வழங்கும் திட்டங்களையும் முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார். "

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் " திட்ட பயனாளிகள் 10 நபர்களுக்கு அரசு பயன்களை வழங்குவதோடு, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட திட்டங்களையும் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நாளை துவக்கி வைக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments