தமிழகத்தில் 49 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

0 2784

மிழகத்தில் 49 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் 5 டிஐஜிக்களுக்கு ஐஜிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 7 எஸ்பிக்கள், டிஐஜிக்களாகவும், 2 ஏஎஸ்பிக்கள், எஸ்பிகளாகவும் பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  பாலகிருஷ்ணன் மத்திய மண்டல ஐஜியாகவும்,  சுதாகர் மேற்கு மண்டல ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, போலீஸ் டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை நிர்வாக டிஐஜியாக இருந்த அன்பு, வேலூர் சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். நலத்திட்ட ஐஜியாக இருந்துவரும் சுமித் சரண், ரயில்வே ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கப்பிரிவு ஐஜி செந்தாமரைக் கண்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக  நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர காவல் ஆணையராக நஜ்முல் ஹோடாவும், திருப்பூர் மாநகர காவல் ஆணையராக வனிதாவும், திருச்சி சரக டிஐஜியாக ராதிகாவும், திண்டுக்கல் சரக டிஐஜியாக விஜயகுமாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments