வெளிநாட்டில் ஒப்புதல் பெற்ற தடுப்பு மருந்துகளுக்கு இந்தியாவில் மீண்டும் சோதனை தேவையில்லை - தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் வேணுகோபால் கருத்து

0 2436

வெளிநாடுகளில் ஒப்புதல் பெற்ற கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு இந்தியாவில் மீண்டும் சோதனையும், தர ஆய்வு செய்ய வேண்டியதில்லை என்றும் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துத் தடுப்பு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் ஒப்புதல் அளித்த தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்து தேவையைச் சமாளிக்க ஏதுவாக அவற்றுக்கு இந்தியாவில் மீண்டும் சோதனை நடத்த வேண்டியதில்லை எனக் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான தேசிய வல்லுநர் குழு பரிந்துரைத்தது.

அமெரிக்காவில் ஒப்புதல் பெற்ற தங்கள் மருந்துகளுக்கு இந்தியாவில் சோதனை செய்வதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என பைசர், மாடர்னா நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments