அசாமில் கொரோனா நோயாளி உயிரிழந்ததால் ஆத்திரம்... மருத்துவரை சரமாரியாக தாக்கிய உறவினர்கள்

0 6246

அசாமில் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஹோஜாய் மாவட்டம் உதலி நகரிலுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி, 3 மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் 20 பேர், மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர் சியூச் குமாரை சரமாரியாக அடித்தனர்.

தடுக்க சென்ற மருத்துவமனை ஊழியர்களையும் கடுமையாக தாக்கினர். இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய மருத்துவ கழகம், மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்ய போலீசாருக்கு அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டதையடுத்து 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments