இந்தியாவில் ஒரே நாளில் 1.32 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 2784

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 788 பேருக்கு  புதிதாக கொரோனா தொற்று உறுதியானது என சுகாதார அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இறப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 207 ஆக உள்ளது. 2 லட்சத்து 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொற்று பாதித்து மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் இருப்பவர்களின்  எண்ணிக்கை சுமார் 17 லட்சத்து  93 ஆயிரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 21 கோடியே 85 லட்சத்து 46 ஆயிரத்து 667 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments