வேகமாக பரவிய கொரோனா அதேவேகத்தில் குறைந்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2953
வேகமாக பரவிய கொரோனா அதேவேகத்தில் குறைந்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதாலும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்பதாலும் கொரோனா குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தொழில் வர்த்தக சபை சார்பில் வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 72 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 4 நாட்களாகக் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைவிடக் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments