உ.பி.யில் சமையல் சிலிண்டர் வெடித்து 4 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு

0 3200

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள டிக்ரி கிராமத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

வாசிர்கஞ்சிற்கு அருகே  உள்ள இந்த கிராமத்தில்,நூருல் அசன் என்பவரின் குடும்பத்தினர் நேற்றிரவு சமையல் செய்து கொண்டிருந்த போது சமையல் சிலிண்டர் திடீரென வெடித்தது. வெடிவிபத்தில் சிதைந்து சின்னாபின்னமான வீட்டில் இருந்து 14 பேர் மீட்கப்பட்டாலும் அவர்களில் 8  பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மற்றவர்கள்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் ஆண்கள், பெண்கள் தலா 2 பேர் மற்றும் 4 குழந்தைகளும் அடக்கம். விபத்து நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments