இன்று 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இயக்குனர் மணிரத்னம்

0 4121

இயக்குனர் மணிரத்னம் இன்று 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

திரை மொழியில் புதிய உத்திகளைப் புகுத்தியவர் மணிரத்னம். யாரிடமும் உதவி இயக்குனராகப் பணிபுரியாமல் நேரடியாக படம் இயக்க வந்தார். கன்னடத்தில் பல்லவி அனுபல்லவி என்ற முதல் படத்தை எடுத்த பிறகு தமிழில் மௌன ராகம் அவருடைய திரையுல வாழ்க்கையில் புதிய திருப்புமுனையாக அமைந்தது,

இதயகோவில், பகல் நிலவு, நாயகன், ரோஜா, உயிரே, பம்பாய், அக்னி நட்சத்திரம், திருடா திருடா, தளபதி, இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற ஏராளமான வெற்றிப் படங்கள் மூலம் தமக்கென தனி முத்திரை பதித்தவர் மணிரத்னம்.

ஏ.ஆர்.ரகுமானை தமிழுக்கு அறிமுகம் செய்தவரும் அவர்தான். ஐஸ்வர்யா ராயை தமிழ் மூலமாக இந்தியாவுக்கே அளித்தவரும் மணிரத்னம்தான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments