சீனாவின் சினோவேக் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

0 2660

சீனாவின் சினோவேக் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் கொடுத்துள்ளது.

இந்த தடுப்பூசி அந்த அமைப்பின் ஒப்புதலை பெறும்  சீனாவின்  2-வது கொரோனா தடுப்பூசியாகும்.  சினோவேக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதன் மூலம், உலக நாடுகள், இந்த தடுப்பூசிக்கு  விரைவாக ஒப்புதல் அளிக்கவும் இறக்குமதி செய்து விநியோகிக்கவும் கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏற்கனவே சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments